அஜித்துடன் மீண்டும் இணைகிறாரா நடிகை திரிஷா...?

ajith trisha

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் மற்றும் கயல் ஆனந்தி நடித்து வெளி வந்த படம் த்ரிஷா இல்லனா நயன்தாரா. இந்த படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது.அதை தொடர்ந்து ரவிச்சந்திரன் நடிகர் விஷால், எஸ்.ஜே. சூர்யாவை வைத்து மார்க் ஆண்டனி திரைப்படத்தை இயக்கினார்.இந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய வெற்றி படமாக மாறிய நிலையில், ஆதிக் ரவிச்சந்திரனுக்கு நடிகர் அஜித் குமார் வைத்து குட் பேட் அக்லி படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது.

Aadhik


தற்போது, மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்து வரும் நிலையில், அடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்திலும் த்ரிஷா அஜித்துக்கு ஜோடியாக நடிக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், த்ரிஷா இல்லனா நயன்தாரா படம் எடுத்த ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்திலேயே த்ரிஷா நடிக்கப் போகிறாரா என சினிமா வட்டாரத்தில் பரவலான பேச்சுகள் அடிபட்டு வருகின்றன.இந்த படத்தில் முன்னதாக டோலிவுட் நடிகை ஸ்ரீலீலா நடிக்க போவதாக பேசி வந்த நிலையில். தற்போது த்ரிஷாவின் பெயர் அடிபட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நடிகை ஸ்ரீலீலா அந்த படத்தில் நடிக்குறாரா? அல்லது இரண்டு ஹீரோயின்களா ? என்பது குறித்த அப்டேட்கள் விரைவில் வெளி வரும் என எதிர்பாக்கப்படுகிறது. 

Share this story