ஹப்பாடா……. ‘லியோ’ படத்தில் திரிஷா இருக்காங்க – வெளியான ஆதாரம்.

photo

 நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜுடன் கூட்டணி அமைத்து தனது 67 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் தலைப்பு ‘லியோ’ என அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் படம் வரும் அக்டோபர் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் படத்தின் படபிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியிருந்த நடிகை திரிஷா படத்திலிருந்து பாதியில் விலகி விட்டதாக தகவல் கசிந்தது.  அதுமட்டுமல்லாமல் கோகேஷ் கனகராஜுடம் அவருக்கு பிரச்சனை என்றும் தகவல் பரவியது. இந்த  நிலையில் அதெல்லாம் முற்றிலும் பொய்யான தகவல் என்பதை நிரூபிக்கும் விதமாக ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது.

photo

திரிஷா காஷ்மீர் படபிடிப்பிலிருந்து மூன்றே நாட்களில் திரும்பியதாக கூறி, அவர் விமானநிலையத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை எற்படுத்தியது. அதாவது கஷ்மீரில் கடும் பனிபொழிவு நிலவுவதால் குளிரை தாங்க முடியாமல் திரிஷா டெல்லியில் ஒரு ஓட்டலில் தங்கியுள்ளாராம், தொடர்ந்து அவர் படபிடிப்பிலும் கலந்துகொண்டுள்ளார். இந்த நிலையில் அடர்ந்த பனி ஒட்டுமொத்த காஷ்மீருக்கும் வெள்ளை போர்வை போர்த்தியது போல இருக்கும் கியூட் வீடியோவை விமானத்திலிருந்து மேகங்களுக்கு இடையிலிருந்து எடுத்துள்ளார் திரிஷா, அதனை தனது இன்ஸ்டா ஸ்டோரியிலும் பதிவிட்டுள்ளார்.

photo

இந்த ஒரு வீடியோ இவ்வளவு நாள் வெளியான ஒட்டுமொத்த வதந்திக்கும் முற்றுபுள்ளி வைத்துள்ளது.

Share this story