கமல் – மணிரத்னம் படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான்?

கமல் – மணிரத்னம் படத்தில் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான்?

கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தில் துல்கர் சல்மான் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் கமல்ஹாசன், பிரபாஸ் நடிக்கும் ‘கல்கி 2898 ஏடி' படத்தில் வில்லனாக நடிக்கிறார். இதையடுத்து, ஹெச்.வினோத் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார். இந்தப் படம் தொடர்பான வீடியோ அண்மையில் வெளியானது. அடுத்து மணிரத்னம் இயக்கும் திரைப்படத்தில், கமல்ஹாசன் நடிக்கிறார். ‘நாயகன்’படத்துக்குப் பிறகு, 37 வருடங்கள் கழித்து இருவரும் மீண்டும் இணைகின்றனர். இதனால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. த்ரில்லர் கதையைக் கொண்ட இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். கமல்ஹாசனின் 234 வது படமான இதில் த்ரிஷா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் ஜெயம் ரவி முக்கிய வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் துல்கர் சல்மானும் இத்திரைப்படத்தில் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 

Share this story