"இளையபிராட்டி..hi…, என்னவாணர்குல இளவரசே?" -ட்விட்டரில் அட்ராசிட்டி செய்யும் வந்தியதேவன்- குந்தவை.

photo

பொன்னியின் செல்வன்2 படத்தில் புரொமோஷன் தொடங்கிய நிலையில், இன்னும் சற்று நேரத்தில் படத்தின் முதல் பாடலான ‘அகநக’ பாடல் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் ட்விட்டரின் மூலமாக வந்தியதேவன்,  குந்தவை குந்தவைக்கு தூதுவிடும் படலம் அரங்கேறிவருகிறது.

photo

 ‘என்னடா….நடக்குது இங்க…..’ என மற்ற பயனர்கள் இவர்களது இந்த படலத்தை எஞ்சாய் செய்து வருகிறனர். அதாவது

வந்தியதேவன் (கார்த்தி ) -  “இளையபிராட்டி..hi…”

(இதற்கு குந்தவையான திரிஷா எந்த பதிலும் பதிவிடாமல் செய்யாமலிருந்தார்)

வந்தியதேவன்                   -  “என்ன பதிலே இல்லை”

குந்தவை (திரிஷா)          - என்ன வாணர்குல இளவரசே

வந்தியதேவன்                  - “தரிசனம் கிடைக்குமா”

திரிஷா                                - ம்ம. யோசித்து செய்தி       அனுப்புகிறேன்.

வந்தியதேவன்                  - “கடல் கடந்து சென்று உங்களது  ஆணையை நிறைவேற்றி விட்டு வருபவனுக்கு                   வெறும் மோரை மட்டும் கொடுத்து அனுப்பிவிட மாட்டீர்களே..?”

photo

திரிஷா                                - வேறென்ன வேண்டும் வந்தியதேவருக்கு? கொடுத்த பொருளை திருப்பி கேட்கபோகிறீர்களா?”

வந்திய தேவன்                 -  “ஐயய்யோ என் உயிர் என்றுமே உங்களுடையது தேவி. நான் பழையாறை வந்ததும் நாம் vibe ஆக ஒரு பாடல் தயார் செய்ய சொல்லுங்களேன்”

திரிஷா                                - “வீரரே பாடல் எப்போதே ready மாலை 6 மணி வரை காத்திருங்கள்”

photo

என இப்படியாக ஃபஸ்ட் சிங்கிள் பாடலுக்காக ஒரு கியூட் சீனே நடந்து வருகிறது


 


 

Share this story