த்ரிஷாவின் அட்டகாசமான நடிப்பில் உருவான "பிருந்தா" வெப் சீரிஸ்
20 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வருபவர் த்ரிஷா. இதுவரை படங்களில் மட்டுமே நடித்து வந்த நிலையில், முதன் முறையாக வெப் தொடரில் நடித்துள்ளார். அந்த வெப் தொடர் இன்று ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. த்ரிஷாவுடன் இந்திரஜித் சுகுமாரன், ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கடைசியாக விஜய்க்கு ஜோடியாக லியோ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து, அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் 'விடாமுயற்சி' படத்தில் நடிக்கிறார். ஜி, கிரீடம், மங்கத்தா, என்னை அறிந்தால் ஆகியப் படங்களைத் தொடர்ந்து த்ரிஷா இப்படத்தில் அஜித்துடன் 5வது முறையாக ஜோடி சேர்ந்துள்ளார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் த்ரிஷா, தெலுங்கில் சிரஞ்சீவியின் விஸ்வபகரா படத்திலும், மலையாளத்தில் மோகன்லாலுடன் ராம் படத்திலும், டோவினோ தாமஸின் ஐடென்டி, பாலிவுட் ஸ்டார் சல்மான் கான் படத்திலும் கமிட்டாகி உள்ளார். படங்கள் மட்டுமில்லாமல், முதல் முறையாக இணையத் தொடர் ஒன்றில் நடித்துள்ளார். 'பிருந்தா' என பெயரிடப்பட்டுள்ள இந்த வெப் தொடர், சோனி லிவ் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் மொழிகளில் சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகி உள்ள இந்த வெப் தொடரில், த்ரிஷா போலீஸ் ஆபிஸராக நடித்துள்ளார்.