திருமண வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா

வதந்திகளை நிறுத்துங்கள்.... திருமண வதந்திகளுக்கு நடிகை த்ரிஷா பதில்...

தனது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் பரவிய தகவல்களை கண்டு ஆத்திரமடைந்த நடிகை த்ரிஷா, வதந்திகளை நிறுத்துங்கள் என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

பொன்னியின் செல்வன் பட வெற்றியை தொடர்ந்து லியோ மற்றும் தி ரோட் திரைப்படங்களில் த்ரிஷா நடித்து வருகிறார். இதை தொடர்ந்து, மலையாளத்திலும் மோகன்லாலுக்கு ஜோடியாக ராம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை த்ரிஷா மலையாள தயாரிப்பாளர் ஒருவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் சில தகவல்கள் உலா வந்தன.

வதந்திகளை நிறுத்துங்கள்.... திருமண வதந்திகளுக்கு நடிகை த்ரிஷா பதில்...

இதற்கு, வதந்திகளை பரப்ப வேண்டாம்... அமைதியாக இருங்கள்... என லியோ போஸ்டர் வசனத்தை குறிப்பிட்டு பதில் அளித்துள்ளார். 

Share this story