விஜய்யின் ரிலேஷன்ஷிப் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா..!

1

விஜயும் திரிஷாவும் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாகவும், விஜயை த்ரிஷா வளைத்து போட பார்ப்பதாகவும் கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு பாடகி சுசித்ரா மீண்டும் ஒரு பூகம்பத்தை கிளப்பி இருந்தார்.

இதை தொடர்ந்து விஜயும் த்ரிஷாவும் ஒன்றாக இருக்கும் போட்டோக்களை வைத்து நெட்டிசன்கள் ஆதாரமாக சோசியல் மீடியாவில் அடுக்கி வருகின்றார்கள். 

கில்லி, ஆதி படங்கள் வெளியாகும் போது த்ரிஷாவும் விஜயும் தனியாக வசித்து வந்ததாக அப்போது தகவல்கள் கிசுகிசுக்கப்பட்டது. இந்த விவகாரம் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது. அதற்கு காரணம் த்ரிஷா போட்ட ஒரே ஒரு போட்டோ தான்.

அதாவது விஜயின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த திரிஷா, விஜய உடன் எடுத்துக்கொண்ட போட்டோவை பதிவிட்டதோடு அதில் ஆங்கில பாடல் வரிகளான 'நீதான் என் காதல்.. சாகும் வரை நீதான் என் காதல்' என்ற வார்த்தையும் அதில் குறிப்பிட்டு பகிர்ந்து இருந்தார். இதை அடுத்து பலவிதமான கதைகள் உலா வரத் தொடங்கியது.

இந்த நிலையில், தற்போது சமூக வலைத்தளங்களில் எழுந்த வதந்திக்கெல்லாம் மறைமுகமாக பதிலடி கொடுக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை பகிர்ந்த த்ரிஷா அதில், 'நீங்கள் எதையாவது அணிவதை நிறுத்த விரும்பினால் மற்றவர்களின் கருத்துக்களின் எடையை உங்கள் மீது போட்டுக் கொள்ளாதீர்கள்' என்ற பதிவையும் குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

இது விஜய் உடனான ரிலேஷன்ஷிப் வதந்திகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது. தற்போது குறித்த தகவல் வைரலாகி வருகின்றன.

Share this story