திரிஷாவின் 'ராங்கி' தாமதம் ஏன் ? ... இயக்குனரின் புதிய விளக்கம் !
திரிஷாவின் 'ராங்கி' படத்தின் ரிலீஸ் தாமதம் குறித்து புதிய விளக்கம் ஒன்றை இயக்குனர் அளித்துள்ளார்.
நடிகை திரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'ராங்கி'. ஆக்ஷன் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ’எங்கேயும் எப்போதும்’ படத்தின் இயக்குனர் எம்.சரவணன் இயக்கியுள்ளார். நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த இப்படம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த படம் வெளியாகாமல் இருந்ததற்கான காரணம் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு தயாரான படத்தை தணிக்கை குழுவிற்கு படக்குழுவினர் அனுப்பி இருந்தனர். இந்த படத்தைப் பார்த்த அவர்கள் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதால் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து இப்படம் மேல்முறையீட்டு குழுவிற்கு அனுப்பப்பட்டது. அவர்கள் குறிப்பிட்ட சில காட்சிகளை நீக்கினால் மட்டுமே அனுமதி என்று கூறினார்.
அதேநேரம் அமெரிக்கா, டாலர், லிபியா, ரா, எஃப்பிஐ ஆகிய நாடுகள் இடம்பெற்ற 30 காட்சிகளை நீக்கி விட்டு யுஏ அனுமதி வழங்கினர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள படத்தின் இயக்குனர் சரவணன், இதற்கு முந்தைய சில படங்களில் பயன்படுத்திய வார்த்தைகளே இந்த படத்தில் பயன்படுத்தி உள்ளோம். ஒரு இளம் பெண்ணின் கதையை சர்வதேச குழுக்கள் உரையாடும் திரைக்கதையை அமைத்துள்ளோம். அதனால் வெளிநாடு தொடர்பான சில காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. அதை தணிக்கை துறையினர் நீக்கி உள்ளனர். இதனால்தான் படம் வெளியாவதற்கு தாமதம் ஏற்பட்டது என இயக்குனர் சரவணன் தெரிவித்துள்ளார்.