ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்ட த்ரிஷா

தி ரோடு திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வரும் நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து த்ரிஷா வீடியோ வௌியிட்டுள்ளார்.
நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் “தி ரோட்” திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இருபாகங்களுக்குப் பிறகு “தி ரோட்” திரைப்படம் தயாரானது. AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் “திரிஷா” மற்றும் “சார்ப்பட்டா” புகழ் டான்சிங் ரோஸ் “சபீர்”, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “தி ரோட்”. இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார்.
With love and respect@trishtrashers for Y'all! #TheRoadRunningSuccessfully #TheRoad
— AAA_CINEMAA (@aaa_cinemaa) October 8, 2023
Have you booked your tickets yet?
🎫 👉🏻 - https://t.co/cYWF2QI9gm@trishtrashers @Actorsanthosh @actorshabeer @actorvivekpra @Arunvaseegaran1 @SamCSmusic @tipsmusicsouth @akash_tweetz pic.twitter.com/o4N4J2b6HO
தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் கடந்த 6-ம் தேதி வெளியான இத்திரைப்படம், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து நடிகை த்ரிஷா வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை நெட்டிசன்கள் டிரெண்டாக்கி வருகின்றனர்.