அப்படி போடு…… கார் சேஸிங் காட்சியில் நடித்த த்ரிஷா- வைரல் வீடியோ!....

photo

கோலிவுட்டின் இளவரசியாக வளம் வரும் த்ரிஷா கார் சேஸிங் காட்சியில் நடித்து அசத்தியுள்ளார். அது தொடர்பான வீடியோவை இணையத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அது வைரலாகி வருகிறது.

photo

தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வரும் த்ரிஷா பெண் மைய்ய கதாப்பாத்திரங்களையும் ஏற்று நடித்து அசத்தி வருகிறார். இந்த நிலையில் ‘இடெண்டிட்டி’ என்ற மலையாள படத்தில் நடித்து வரும் அவர், தனது சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் த்ரிஷா கார் சேஸிங் காட்சியில் நடிப்பது படமாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் த்ரிஷாவுடன் இணைந்து டோவினோ தாமஸ், வினய் ஆகியோர் நடித்து வருகின்றனர். த்ரிஷாவின் இந்த வீடியோ இணையத்தில் தீயாக வைரலாகி வருகிறது.


 

Share this story