நியூயார்க் டைம்ஸ்-ல் திரிஷா - சமந்தா ஸ்டோரி வைரல்

Trisha
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளுள் ஒருவராவார் திரிஷா. இவர் நடிகர் விஜய் நடித்த லியோ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து இருந்தார். இப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. சில மாதங்களுக்கு முன் விஜய் நடிப்பில் வெளியான கோட் திரைப்படத்தில் மட்ட என்ற பாடலில் சிறப்பு நடனம் ஆடினார். தற்பொழுது அஜித் நடித்துள்ள விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். தக் லைஃப் மற்றும் தெலுங்கில் விஷ்வம்பரா மற்றும் மலையாளத்தில் ஐடன்டிட்டி போன்ற திரைப்படங்களில் நடித்து படும் பிஸியாக உள்ளார் திரிஷா. samஇந்நிலையில் மிக பிரபல வெளிநாட்டு நாளிதழான நியூ யார்க் டைம்ஸ் -இல் இடம் பெற்ற புதிர் வினாக்கு விடையாக திரிஷா இடம்பெற்றுள்ளார். தென்னிந்திய நடிகை என இருந்தது. இதை நடிகை திரிஷா பெருமையுடன் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.இப்பதிவை நடிகை சமந்தா அவரது பக்கத்தில் குவீன் என்ற தலைப்புடன் பகிர்ந்துள்ளார்.

Share this story