திரிஷாவிடம் ‘லியோ’ அப்டேட் கேட்ட ரசிகர்கள்.. என்ன சொன்னாங்கன்னு பாருங்க !

trisha

‘லியோ’ படத்தின் அப்டேட் குறித்து நடிகை திரிஷாவிடம் ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பொன்னியின் செல்வன் 2’ திரைப்படம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையொட்டி சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

trisha

தற்போது இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் ‘PS Anthem’ பாடல் நேற்று வெளியிடப்பட்டது. இந்த பாடல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா பல்கலைக் கழக்கத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், திரிஷா, விக்ரம், கார்த்தி உள்ளிடோர் கலந்துக்கொண்டனர். 

trisha

இந்த விழாவில் பேசிய திரிஷாவிடம் ‘லியோ’ படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அந்த படம் குறித்து பின்னர் பேசலாம் என்று கூறி பொன்னியின் செல்வன் அனுபவங்களை பகிர்ந்தார். இது ரசிகர்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. 

 

Share this story