ஆக்‌ஷனில் அடித்து நொறுக்கும் திரிஷா... ‘தி ரோட்’ மேக்கிங் வீடியோ வெளியீடு !

trisha

 திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ‘தி ரோட்’ படத்தின் மிரட்டலான மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவின் பிரபல நடிகையாக இருக்கும் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி ரோட்’. இந்த படத்தில் ‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் டான்சிங் ரோஸாக கலக்கிய ஷபீர், திரிஷாவுடன் இணைந்து முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்எஸ் பாஸ்கர், வேல ராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

trisha

கடந்த 2000-ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற உண்மை சம்பவத்தின் பின்னணியில் இப்படம் உருவாகி வருகிறது. அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இந்தப் படத்தை இயக்குகிறார். சாம் சிஎஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றுள்ளது.

trisha

இந்நிலையில் நடிகை திரிஷா பிறந்தநாளையொட்டி இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படத்தின் மேக்கிங் வீடியோ படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் நடிகை திரிஷா அடித்து நொறுக்கியுள்ளார். இந்த மேக்கிங் காட்சிகள் படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. 


 

Share this story