அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக த்ரிஷா.... இணையும் வெற்றிக் கூட்டணி...

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக த்ரிஷா....  இணையும் வெற்றிக் கூட்டணி... 

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் 2021-ம் ஆண்டு வெளியானது. படத்தில், ராஷ்மிகா மந்தனா, ஃபகத் பாசில், ஜகதீஷ், சுனில், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டைட்டில் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு சுதந்திர தினம் அன்று வெளியாகும் என படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. 

அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக த்ரிஷா....  இணையும் வெற்றிக் கூட்டணி... 

இந்நிலையில், அலவைக்குந்தபுரமுலோ வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைகிறது. த்ரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் இயக்கும் அடுத்த படத்தில் அல்லு அர்ஜூன் நாயகனாக நடிக்கிறார். இது அல்லு அர்ஜூனின் 22-வது திரைப்படம் ஆகும். இப்படத்தில் நாயகியாக த்ரிஷாவை ஒப்பந்தம் செய்ய படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.  

Share this story