சல்மான் கானுக்கு ஜோடியாக நடிக்கும் த்ரிஷா
தற்பொழுது முன்னணி நாயகியாக வளம் வரும் திரிஷா தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலக நாயகன் கமல்ஹாசன், தளபதி விஜய், தல அஜித் மற்றும் நடிகர் சூர்யா உள்ளிட்ட பலருடனும் நாயகியாக பல திரைப்படங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தியவர் திரிஷா. இந்த 2023 ஆம் ஆண்டு அவருடைய நடிப்பில் மூன்று திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் வெளியான அவருடைய லியோ திரைப்படம் மக்கள் மத்தியில் ஒரு மிகப்பெரிய வரவேற்பை அவருக்கு கொடுத்தது. இந்நிலையில் பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் பாலிவுட் உலகில் இயக்க உள்ள ஒரு படத்தில் நடிக்க தற்பொழுது ஒப்பந்தமாகியுள்ளார் திரிஷா.
இதற்கு முன்னதாக கடந்த 2010 ஆம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான கட்டா மேத்தா என்கின்ற திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். ஆகவே சுமார் 13 ஆண்டுகள் கழித்து தற்பொழுது அவர் பாலிவுட் உலகில் Re-Entry கொடுக்கின்றார்.