சிரஞ்சீவி படத்திற்காக குதிரையேற்ற பயிற்சியில் த்ரிஷா

சிரஞ்சீவி படத்திற்காக குதிரையேற்ற பயிற்சியில் த்ரிஷா 

விஜய் நடித்த லியோ, அஜித் நடித்து வரும் விடாமுயற்சி, கமலஹாசன் நடித்து வரும் தக்லைப் ஆகிய படங்களில் நடித்து வரும் நடிகை த்ரிஷா, அடுத்ததாக தெலுங்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி உடன் நடிக்க இருக்கும் படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து த்ரிஷா தனது சமூக வலைதள பக்கத்தில் 18 ஆண்டுகள் கழித்து சிரஞ்சீவி அவர்களுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளேன் என்றும் இந்த வாய்ப்பை எனக்கு அளித்த சிரஞ்சீவி அவர்களுக்கு தனது நன்றி என்றும் தெரிவித்தார். யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில்  சிரஞ்சீவி த்ரிஷா மற்றும் பலர் நடிக்க உள்ளனர் என்பதும்  நட்சத்திர தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சிரஞ்சீவி படத்திற்காக குதிரையேற்ற பயிற்சியில் த்ரிஷா 

சரித்திரக் கதை என்பதால், படத்திற்காக நடிகை த்ரிஷா பல பயிற்சிகளை எடுத்துக்கொண்டு வருகிறார். குதிரையேற்றம், வளரி சண்டை உள்ளிட்ட பயிற்சிகளை கற்று வருகிறார் நடிகை த்ரிஷா. 
 

Share this story