நியூயார்க்கில் கூலாக உலா வந்த த்ரிஷா

நியூயார்க்கிற்கு சுற்றுலா சென்றுள்ள த்ரிஷா, அங்கு சைக்கிள் சவாரி சென்றபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
விஜய்யுடன் லியோ படத்தில் நடித்துள்ள த்ரிஷா, அடுத்து அஜித்துடன் விடாமுயற்சியில் நடிக்கப் போகிறார். அதன் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கும் படங்களிலும் த்ரிஷா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதோடு தற்போது அவர் நாயகியாக நடித்திருக்கும் 'தி ரோடு' என்ற திரைப்படம் அக்டோபர் 6-ம் தேதி திரைக்கு வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றுள்ள த்ரிஷா, நியூயார்க் நகரத்தில் உள்ள சாலைகளில் சைக்கிள் சவாரி செய்துள்ளார். அது குறித்த வீடியோ ஒன்றையும் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Coz I don’t do life without you❣️🧿#newyork #summer2023 pic.twitter.com/CIxQOoEWcV
— Trish (@trishtrashers) September 30, 2023