அஜித் பட படப்பிடிப்பில் இருந்து திடீரென கிளம்பிய த்ரிஷா.. காரணம் என்ன

trisha
நடிகை த்ரிஷா பல வருடங்களுக்கு பின் அஜித்துடன் இணைந்து நடித்துள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. ஆனால், இன்னும் ஒரே ஒரு பாடல் காட்சி பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித்துடன் த்ரிஷா இணைந்து நடித்து வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. ஆனால், இப்படத்தில் த்ரிஷா நடிப்பதாக இதுவரை அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. இந்த நிலையில், ஸ்பெயின் நாட்டில் குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், திடீரென நடிகை த்ரிஷா படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளாராம். படப்பிடிப்பில் சண்டை ஏதாவது நடந்து, கிளம்பி வந்துவிட்டாரா என கேள்வி எழுந்த நிலையில், அதெல்லாம் ஒன்றுமில்லை நகைக்கடை விளம்பரத்தில் நடிப்பதற்காக குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இருந்து கிளம்பி சென்னைக்கு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது. விரைவில் அவர் குட் பேட் அக்லி படப்பிடிப்பில் இணைந்துவிடுவார் என தகவல் தெரிவிக்கின்றனர்.  

Share this story