லியோ படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த த்ரிஷா

லியோ படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த த்ரிஷா

தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய்யின் லியோ படம் வெளியாகி உள்ளது. கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் லியோ திரைப்படம் இன்று காலை வெளியானது. கேரளா மற்றும் கர்நாடகாவில் அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானது. ஆந்திராவில் அதிகாலை 5 மணிக்கு முதல் காட்சிகளை திரையிடத் தொடங்கினர். லியோ திரைப்படம் வெளியாகியுள்ள நிலையில் விஜய் ரசிகர்கள் அதை கொண்டாடி வருகின்றனர்.

லியோ படத்தை ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்த த்ரிஷா

இந்த நிலையில், நடிகை திரிஷா ரசிகர்களுடன் அமர்ந்து லியோ படத்தை கண்டுகளித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கில் இன்று லியோ திரைப்பட்டம் காலை 11 மணிக்கு திரையிடப்பட்டது. இதனை நடிகர் திரிஷா ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்தார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.
 

Share this story