அனிமல் படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல்

அனிமல் படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல்

அர்ஜூன் ரெட்டி படத்திற்கு பிறகு சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் இந்தியில் உருவாகி வரும் திரைப்படம் அனிமல். இப்படத்தில், ரன்பீர் கபூர் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். அனில் கபூர், பாபி தியோல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சைக்கோ கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை டி சீரிஸ் நிறுவனம் தயாரிக்கிறது. ஹஸ்வர்தன் ராமேஸ்வர் படத்திற்கு இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பை பெற்றது. இந்நிலையில், அனிமல் திரைப்படம் கடந்த 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்று வருகிறது. 

அனிமல் படத்தால் த்ரிஷாவுக்கு வந்த சிக்கல்

இந்நிலையில், அனிமல் திரைப்படத்தை பாராட்டி பதிவிட்ட த்ரிஷா அதை உடனடியாக நீக்கியுள்ளார். ரசிகர்கள் பலர் த்ரிஷாவை திட்டி கமெண்ட் செய்ய, அந்த பதிவை அவர் உடனடியாக நீக்கிவிட்டார். 

Share this story