திரிஷாவின் தி ரோட் திரைப்படம் அக்டோபர் 6-ம் தேதி வெளியீடு

திரிஷா நடிக்கும் “தி ரோட்” திரைப்படம் அக்டோபர் 6 -ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
நடிகை திரிஷாவின் திரைப்பயணத்தில் “தி ரோட்” திரைப்படம் மிகப்பெரியப் பொருட்ச்செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. பொன்னியின் செல்வன் இருபாகங்களுக்குப் பிறகு “தி ரோட்” திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. AAA சினிமா பிரைவேட் லிமிடெட் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் இயக்கத்தில் “திரிஷா” மற்றும் “சார்ப்பட்டா” புகழ் டான்சிங் ரோஸ் “சபீர்”, சந்தோஷ் பிரதாப், மியா ஜார்ஜ், எம்.எஸ். பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா ஆகிய நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் “தி ரோட்”. இப்படத்திற்கு சாம்.C.S இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. இந்நிலையில், தி ரோட் திரைப்படம் வரும் அக்டோபர் 6-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
#Trisha's action thriller #TheRoad will hit the screens on October 6.
— George 🍿🎥 (@georgeviews) September 8, 2023
The promo promises riveting revenge thriller! @trishtrashers looks intense and fierce. 🔥 Looking forward to this film. #TheRoadFromOct6 #SouthQueen #Leopic.twitter.com/SeVQ6maXb6
Finally the waiting is over #TheRoad going to rock the screen on Oct 6,2023 worldwide ❤️🔥😍 @trishtrashers @SamCSmusic @ActorSanthosh #TheRoad #TrishaKrishnan #cineulagam #Trisha #TamilCinema #Kollywood #kollywoodcinema #samcs #Trishafans pic.twitter.com/KkGttGok68
— Cineulagam (@cineulagam) September 8, 2023