‘ஜெய் ஹனுமன்’ படத்தில் இணைந்த டி-சீரிஸ் நிறுவனம்...!

jai hanuman

‘ஜெய் ஹனுமன்’ படத்தை மைத்ரி நிறுவனத்துடன் இணைந்து டி-சீரிஸ் நிறுவனமும் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

‘ஹனுமன்’ படத்தின் வெற்றிக்கு பிறகு பல்வேறு முன்னணி நடிகர்களிடம் கதைகள் கூறினார் இயக்குநர் பிரசாந்த் வர்மா. இறுதியாக ரிஷப் ஷெட்டி நடிக்க ‘ஜெய் ஹனுமன்’ படத்தை இயக்கவிருப்பதாக பிரசாந்த் வர்மா அறிவித்தார். இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.jai hanuman

‘ஜெய் ஹனுமன்’ படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வந்தாலும், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பதே தெரியாமல் இருந்தது. ஏனென்றால் ‘காந்தாரா’ 2-ம் பாகத்தின் பணிகளில் தீவிரமாக பணிபுரிந்து வந்தார் ரிஷப் ஷெட்டி. தற்போது ‘ஜெய் ஹனுமன்’ படத்தின் தயாரிப்பில் டி-சீரிஸ் நிறுவனம் இணைந்திருக்கிறது 


இந்தியில் பல்வேறு பிரம்மாண்ட படங்களை தயாரித்து வரும் நிறுவனம் டி-சிரீஸ். ‘ஜெய் ஹனுமன்’ படத்தில் இணைந்திருப்பதால், விரைவில் படத்தின் பணிகள் தீவிரமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஜெய் ஹனுமன்’ படத்தின் 3டி மற்றும் ஐமேக்ஸ் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது

Share this story