டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு 2-வது முறையாக தள்ளுபடி

டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி

யூடியூபர் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பாலுசெட்டி சத்திரம் அருகே சாகசத்தில் ஈடுபட முயன்றபோது, டி.டி.எஃப் வாசனின் இருசக்க வாகனம் விபத்தில் சிக்கியது. அப்போது சாலையோர பள்ளத்தில் விழுந்த அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது. அதேநேரம்,  உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை இயக்கியது,  கவனக்குறைவாக  செயல்படுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளில்  வழக்குப் பதிவு செய்யப்பட்டு டிடிஎஃப் வாசன் கைது செய்யப்பட்டார். இதையடுத்து 15 நாட்கள் நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அவர் இரண்டாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 

Share this story