‘மைக் Off பண்ணிட்டு வெளியே வா... செய்தியாளரை சொடக்கு போட்டு கூப்பிட்ட யோகிபாபு!
போட் பட விழாவில் செய்தியாளர்களை சொடக்கு போட்டு திமிராக யோகிபாபு பேசியிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் ஆக்கப்பட்டு நடிகர்களில் ஒருவராக யோகிபாபு திகழ்ந்து கொண்டு வருகிறார். ஆரம்பத்தில் காமெடியனாக நடித்து வந்த யோகி பாபு தற்போது ஹீரோவாகவும் கலக்கிக் கொண்டு வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் யோகி பாபு தயாரிப்பாளர்களுக்கு முன்பணம் வாங்கிக் கொண்டும், சம்பளம் வாங்கிக் கொண்டும் படப்பிடிப்பிற்கு சரியான தேதி ஒதுக்குவதில்லை.எனவே, அவர் மீது ரெட் விதிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் பல புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. எனவே, அவர் படத்திற்கு ஒத்துழைப்பு வழங்கக் கூடாது என்றும் படத்திற்கு சங்கத்தில் முடிவெடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது அவர் ஹீரோவாக நடித்த முடித்த படத்தை பிரபலப்படுத்தவும், மக்களிடம் கொண்டு செல்லவும் இயக்குனர், தயாரிப்பாளர்கள் முயற்சி செய்யும்போதும் அதற்கும் யோகிபாபு ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என்று கூறுகின்றனர்.
boat படம்: அந்த வகையில் தான் Boat திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பிற்கும் நடந்துள்ளது. தற்போது யோகி பாபு நடிப்பில் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் போட். இந்த இயக்கத்தில் கௌரி கிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தினுடைய செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்று இருக்கிறது. இந்த நிகழ்ச்சி 6:00 மணிக்கு தொடங்கும் என்று அறிவித்திருந்தார்கள்.பின் படக்குழுவினர் 7:00 மணிக்கு வந்துவிட்டார்கள். இருந்தாலுமே நடிகர் யோகி பாபு வரவில்லை. காரணம், யோகி பாபு வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்ததார். அவரால் நிகழ்ச்சியில் ஒரு கொள்ள முடியவில்லை. இருந்தாலுமே நிகழ்ச்சி முடிவதற்குள் வந்துவிடுவதாக படக்குழுவினருக்கு அறிவித்திருக்கிறார். பின் படக்குழுவினர்கள் அனைவருமே செய்தியாளர்கள் கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்கள். அதற்குப் பின் நிகழ்ச்சி முடிந்த பிறகு 9 மணி அளவில் யோகிபாபு வந்திருந்தார்.அப்போது பத்திரிகையாளர்கள் யோகி பாபுவிடம் தாமதமாக வந்ததற்கு கேள்வி கேட்டார்கள். அதற்கு யோகிபாபு, அனைவருக்குமே வணக்கம். சில தினங்களுக்கு முன்பு நான் குற்றாலத்தில் படப்பிடிப்புக்காக சென்றிருந்தேன். முன்பு மணி நேரம் காரில் பயணித்து இந்த படத்தினுடைய புரமோஷனுக்கு வந்திருக்கிறேன். எல்லா கம்பெனியும் எல்லா நேரமும் அட்ஜஸ்ட் பண்ண மாட்டார்கள். என்னுடைய சூழ்நிலை, அப்படி மாட்டிக் கொண்டேன். யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். எப்போதுமே உங்களுடைய ஒத்துழைப்பு எனக்கு வேண்டும். திமிராக யோகி பாபு பேச காரணம்: மேலும், எல்லா டிராபிக்கிலும் பதில் சொல்லிட்டு வர முடியுமா? படத்தின் புரமோஷனுக்கு வர சொல்லி என்னிடம் நேரம் சொல்லவில்லை. உங்கள் கோபம் எனக்கு புரிகிறது. இருந்தாலுமே மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். பின் பேசி முடித்து விட்டு யோகி பாபு கிளம்பும் போது செய்தியாளர் ஏதோ கேள்வி கேட்டிருக்கிறார். உடனே அவர், சொடக்கு போட்டு மைக்கை ஆஃப் பண்ணிட்டு வெளியே வா பேசிக் கொள்ளலாம் என்று விளையாட்டாக சொன்னார். தற்போது இந்த வீடியோவை தான் நெட்டிசன்கள் வைரலாகி வருகிறது
‘மைக் Off பண்ணிட்டு வெளியே வா... மேடையில் திமிராக பேசி செய்தியாளரை சொடக்கு போட்டு கூப்பிட்ட யோகிபாபு!#YogiBabu #ActorYogibabu #YogiBabuAngry #BoatMovie #ChimbuDeven #GouriKishan #NewsTamil24x7 pic.twitter.com/OiHNi4hR8a
— News Tamil 24x7 (@NewsTamilTV24x7) July 28, 2024