அடுத்தடுத்து இரண்டு வெற்றி படங்கள்... கேக் வெட்டி கொண்டாடிய மோகன்லால்...!

mohanlal

அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு வெற்றி படங்கள் கொடுத்தால், நடிகர் மோகன்லால் அதனை கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். 

மலையாள சினிமாவில் ஒரே நடிகர் நடித்து அடுத்தடுத்த மாதங்களில் வெளியான படங்கள் 200 கோடி வசூலித்துள்ளன. அப்படி ஒரு சாதனையை மோகன்லால் புரிந்துள்ளார்.ஏப்ரல் மாதத்தில் அவர் நடித்து வெளியான 'எல் 2 எம்புரான்', படமும் மே மாதத்தில் அவர் நடித்து வெளியான 'தொடரும்' படமும் 200 கோடி வசூலைக் கடந்துள்ளது.பான் இந்தியா நடிகர்கள் என தங்களை பிரபலப்படுத்திக் கொள்ளும் தெலுங்கு, ஹிந்தி நடிகர்கள் கூட இப்படி ஒரு சாதனையை இதுவரை புரிந்திருக்க வாய்ப்பில்லை என கூறப்படுகிறது. 


இந்த வெற்றியை மோகன்லால் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். 'எல் 2 எம்புரான்' படத்தில் அவரது கதாபாத்திரமான ஸ்டீபன், 'தொடரும்' படத்தில் அவரது கதாபாத்திரமான 'பென்ஸ்' உருவங்களை அந்த கேக்கில் வைத்துள்ளனர். மலையாள சினிமாவில் முதல் 100 கோடி திரைப்படம் 'புலிமுருகன்', வெளிநாடுகளில் முதல் 100 கோடி வசூல் பெற்ற மலையாளத் திரைப்படம் 'எம்புரான்', கேரளாவில் மட்டும் முதல் 100 கோடி வசூல் பெற்ற மலையாளத் திரைப்படம் 'தொடரும்' என சில முக்கிய சாதனைகளை மோகன்லால் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story