ஒரே நாளில் இரண்டு துயரங்கள்... நடிகர் போஸ் வெங்கட் வீட்டில் நடந்த துயரம் !

bose venkat

நடிகர் போஸ் வெங்கட்டின் அக்கா மற்றும் அண்ணன் ஒரே நேரத்தில் இறந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது. 

சின்னத்திரையில் பிரபல சீரியல் நடிகராக இருந்தவர் போஸ் வெங்கட். சூப்பர் ஹிட் சீரியலான ‘மெட்டி ஒலி’ சீரியல் மூலம் பிரபலமான நடிகராக மாறினார். இந்த சீரியலுக்கு பிறகுதான் வெங்கட் என்ற பெயரை போஸ் வெங்கட் என்று மாற்றிக்கொண்டார்.  

bose venkat

சீரியலுக்கு பிறகு சினிமாவிலும் ஜொலிக்க ஆரம்பித்தார். ‘தலைநகரம்’ படத்தின் மூலம் சினிமாவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதன்பிறகு கவண், தீரன் அதிகாரம் ஒன்று, தர்மபிரபு, குலசாமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். ‘கன்னி மாடம்’ படத்தின் மூலம் இயக்குனராகவும் அடியெடுத்து வைத்துள்ளார். 

சென்னை எம்எம்டிஏ பகுதியில் வசித்து வரும் போஸ் வெங்கட்டின் சகோதரி வளர்மதி நேற்று மாரடைப்பால் உயிரிழந்தார். இதையறிந்து உறவினர்களும், நண்பர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். அப்போது சோகத்தில் இருந்த போஸ் வெங்கட்டின் அண்ணன் ரங்கநாதனும் மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே உயிரிழந்தார். இப்படி அடுத்தடுத்து அவரது வீட்டில் நடந்த துயர சம்பவம் ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் கண்ணீரில் மூழ்கடித்துள்ளது. 

 

 

 

Share this story