'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு U / A சான்று

சந்தானம் நடித்துள்ள 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு தணிக்கை குழு U / A சான்று வழங்கியுள்ளது.
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் நடிகர் சந்தானம். 2016-ல் சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'தில்லுக்கு துட்டு', 2023-ல் வெளிவந்த 'டிடி ரிட்டர்ன்ஸ்' ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து இதன் மூன்றாம் பாகமாக 'டிடி நெக்ஸ்ட் லெவல்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஆர்யாவின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். இதில் சந்தானத்துடன் இணைந்து கஸ்தூரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் 16ஆம் தேதி வெளியாக உள்ளது. அண்மையில், இப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சிம்பு கலந்துகொண்டார் . இதற்கிடையில் 'டிடி நெக்ஸ்ட் லெவல்' படத்திற்கு தணிக்கை குழு U / A சான்று வழங்கியுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளனர்.