`குட் பேட் அக்லி' படத்திற்கு U/A சான்று..!

நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி உள்ள `குட் பேட் அக்லி' படத்தின் 'ரன் டைம்' குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் உருவாகி இருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இந்தப் படத்தில் அஜித் குமாருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
#GoodBadUgly CBFC Report
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 7, 2025
Final Duration: 2hrs 19mins 52secs
Certified: UA 16+ pic.twitter.com/82GD3GVLYy
'குட் பேட் அக்லி' திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகவுள்ளது. ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த படத்தின் அண்மையில் வெளியாகி மக்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படத்தின் ரன் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. திரைப்படம் 2 மணிநேரம் 19 நிமிடங்கள் 52 விநாடியாக உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது, மேலும், படத்துக்கு தணிக்கை குழு U/A சான்று வழங்கியுள்ளது.