உதயநிதியின் 'மாமன்னன்' பாடல்கள் வெளியீடு !

உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள 'மாமன்னன்' படத்தின் முழு பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் இந்த மாதம் வெளியாகவுள்ளது. அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.
இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது
இதையொட்டி இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து பாடல்களும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
#MAAMANNAN songs are out now https://t.co/X9I6wL7HMs@mari_selvaraj @arrahman #Vadivelu @KeerthyOfficial #FahadhFaasil @RedGiantMovies_ @thenieswar @editorselva @dhilipaction @MShenbagamoort3 @kabilanchelliah @kalaignartv_off @SonyMusicSouth @NetflixIndia @teamaimpr pic.twitter.com/ZIGob1x9JJ
— Udhay (@Udhaystalin) June 1, 2023