உதயநிதிக்கு வில்லனா பிக்பாஸ் நடிகர் ?.. ‘நெஞ்சுக்கு நீதி’ 2வது போஸ்டர் வெளியீடு !

Nenjukku Neethi

‘நெஞ்சுக்கு நீதி’ படத்தில் உதயநிதிக்கு வில்லனாக பிக்பாஸ் நடிகர் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் சூப்பர் ஹிட்டடித்த ‘ஆர்டிகிள் 15’ திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக்காகி வருகிறது. உதயநிதி ஹீரோவாக நடித்து வரும் இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்கி வருகிறார். சாதி ரீதியிலான பாகுபாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன் வைக்கவுள்ள இப்படத்தில் உதயநிதி போலீசாக நடித்து வருகிறார். 

Nenjukku Neethi

தென்னிந்திய உரிமையை போனி கபூர் பெற்று நிலையில் இப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரித்து வருகிறது. ‘நெஞ்சுக்கு நீதி’ என்ற தலைப்பில் உருவாகும்  இந்த படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக ‘கருப்பன்’ படத்தின் ஹீரோயின் தன்யா நடித்து வருகிறார். இப்படத்தில் நடிகை தன்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர், ஆரி, இளவரசு, மயில்சாமி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். திப்பு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Nenjukku Neethi

சமீபத்தில் இப்படத்தின் புகைப்படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் உதயநிதி மற்றும் பிக்பாஸ் நடிகர் ஆரி ஆகிய இருவரும் மாஸாக தோன்றியுள்ளனர். இந்த போஸ்டருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதோடு இப்படத்தில் உதயநிதிக்கு வில்லனாக ஆரி நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 

Share this story