உதயநிதியின் மாமன்னனுக்கு ‘U/A’... தணிக்கைத்துறை தகவல் !
உதயநிதியின் ‘மாமன்னன்’ படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படம் வரும் ஜூன் 29-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
தற்போது இப்படத்தின் தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்திற்கு யுஏ சான்றிதழை சென்சார் போர்டு வழங்கியுள்ளது.