மிரட்டலான தோற்றத்தில் உதயநிதி, வடிவேலு.. ‘மாமன்னன்’ பிரத்யேக புகைப்படங்கள் !

maamanan

 உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் ‘மாமன்னன்’ படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. 

maamanan

உதயநிதி மற்றும் வடிவேலு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இவர்களுடன் பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது. 

maamanan

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார்.  உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது.  இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

maamanan

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தின்  ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர்  சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் பிரத்யேக புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் மிரட்டலான லுக்கில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் உள்ளனர். இந்த புகைப்படங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது. 

maamanan

Share this story