வெறித்தனம் செய்துள்ள உதயநிதி - வடிவேலு... ‘மாமன்னன்’ மேக்கிங் வீடியோ வெளியீடு !

maamannan

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் மேக்கிங் வீடியோவை நடிகர் உதயநிதி வெளியிட்டுள்ளார். 

maamannan

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ளது ‘மாமன்னன்’ திரைப்படம். இந்த படத்தில் உதயநிதி மற்றும் வடிவேலு ஆகிய இருவரும் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர்.

maamannan

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

maamannan

வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் நாளை உலகம் முழுவதும் உள்ள திரையரங்கில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை நடிகர் உதயநிதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘மாமன்னன்’ திரைப்படம் எப்படி உருவானது, உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் ஆகியோரது காட்சிகள் எப்படி எடுக்கப்பட்டது என்பது குறித்த காட்சிகள் உள்ளது. 

maamannan


 

Share this story