ஓடிடியில் வெளியாகும் உதயநிதியின் ‘மாமன்னன்’.. எப்போது தெரியுமா ?

maamannan

 உmaamannanதயநிதி நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாமன்னன்‘ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 

உதயநிதி, வடிவேலு கூட்டணியில் மாஸ் ஹிட்டடித்துள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. இந்த படத்தில் உதயநிதிக்கு தந்தையாக வடிவேலு நடித்துள்ளார். வழக்கமாக காமெடி வேடங்களில் மட்டுமே நடித்து வந்த வடிவேலு, இந்த படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார். அரசியல் மற்றும் த்ரில்லரில் பாணியில் வெளியான இப்படம் சமூக ரீதி குறித்தும், சமத்துவம் குறித்தும் இந்த படம் ஆழமாக பதிவு செய்துள்ளது. 

 

பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமானின் பின்னணி இசை இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருந்தது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உருவான இப்படம் கடந்த ஜூன் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 

திரையரங்குகளில் வெற்றிக்கரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படம் வரும் ஜூலை 27-ஆம் நெட்பிளிக்ஸ் ஓடிடித் தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் வெளியான இப்படம் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Share this story