சித்தார்த் படத்தை வாழ்த்திய கமல், உதயநிதி ஸ்டாலின்

சித்தார்த் படத்தை வாழ்த்திய கமல், உதயநிதி ஸ்டாலின் 

சித்தார்த் நடிப்பில் வெளியாகியுள்ள 'சித்தா' திரைப்படம் வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தை பார்த்து நடிகர் கமல்ஹாசன் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். 

சித்தார்த் படத்தை வாழ்த்திய கமல், உதயநிதி ஸ்டாலின் 

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சிந்துபாத்   ஆகிய படங்களை இயக்கிய S.U அருண் குமார் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் உருவாகி உள்ள  திரைப்படம் 'சித்தா'. விஷால் சந்திர சேகர் பின்னணி இசையமைத்துள்ளார். சித்தப்பா மகள் உறவை பேசும் இப்படம் இன்று திரைக்கு வந்துள்ள நிலையில் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்து வருகிறது. இத்திரைப்படத்தை பார்த்த, நடிகர் கமல்ஹாசன் மற்றும் அமைச்சர் உயதநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என படம் அழுத்தமாக பேசுவதாக படகுழுவினரை  கமல்ஹாசன் வாழ்த்தியுள்ளார். அதே போல, சமூகப் பொறுப்புள்ள படமாக சித்தா வெளியாகியுள்ளது என அமைச்சர் உயதநிதி ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். 

Share this story