மனைவி கிருத்திகா உடன் வாக்கு செலுத்திய உதயநிதி ஸ்டாலின்!
1645254772682
தமிழகத்தில் நகர்புற உள்ளாட்சி மன்ற தேர்தல் இன்று காலை முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிவடைகிறது.
நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி கிருத்திகா உடன் வாக்களித்துள்ளார்.

இன்று காலை நடிகர் விஜய் சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இந்தத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த பலர் போட்டியிடுகின்றனர். மேலும் விஜய் இந்த தேர்தலில் தனது புகைப்படம் மற்றும் இயக்கத்தின் கொடியைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், நடிகர் அருண் விஜய் உள்ளிட்ட பல திரைதிரையினரும் இன்று வாக்கு செலுத்தியுள்ளனர். .

