அதிக விலைக்கு விலைப்போன ‘மாமன்னன்’... ரிலீசுக்கு முன்னரே இப்படியா ?

maamannan

உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் ஓடிடி உரிமை அதிக விலைக்கு விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அமைச்சராவற்கு முன்பு உதயநிதி கடைசியாக நடித்த திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். இந்த படத்தை பரியேறும் பெருமாள், கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார்.

maamannan

இந்த படத்தில் உதயநிதி கதாநாயகனாக நடித்துள்ளார். உதயநிதிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இவர்களுடன் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

maamannan

சமீபத்தில் இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஓடிடி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதன்படி நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் இந்த படத்தை 23 கோடிக்கு வாங்கியுள்ளது. இது உதயநிதி படத்திற்கு கிடைத்த அதிக தொகையாக கருதப்படுகிறது. அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story