வெறித்தனமாக உருவாகியுள்ள 'மாமன்னன்'... மிரட்டலான டிரெய்லருக்கு வரவேற்பு !

maamanan

உதயநிதியின் 'மாமன்னன்' படத்தின் டிரெய்லர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

இயக்குனர் மாரி செல்வராஜின் மாறுப்பட்ட கதைக்களத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாமன்னன்'. உதயநிதியின் வழக்கமான படம் போல் இல்லாமல் வித்தியாசமாக இப்படம் உருவாகியுள்ளது. ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரித்து வெளியிடும் இந்த படம் வரும் ஜூன் 29-ஆம் ‌‌‌‌‌‌வெளியாகவுள்ளது. 

maamannan

இந்நிலையில் இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. மாறுப்பட்ட இந்த டிரெய்லர் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இந்த டிரெய்லர் மக்களுக்காக போராடும் மாவீரனான உதயநிதி நடித்துள்ளார். அவரது நடிப்பு இந்த படத்தில் மிகப்பெரிய அளவில் பேசப்படும். அதேநேரம் இந்த டிரெய்லர் படத்திற்கான எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.  ‌

இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றுள்ளது. அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story