முதலமைச்சரையும்விட்டுவைக்காத‘லவ்டுடே’ படத்தின்எஃபக்ட்- சுவாரசியமானதகவல்.

photo

லவ்டுடேபடம்பார்த்துதுர்காஸ்டாலினின்என்னசொன்னார்என்பதுகுறித்துநடிகர்உதயநிதிஸ்டாலின்பகிர்ந்துள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான படம் லவ் டுடே. சமகால காதல் கதையை மையமாக வைத்து உருவான இந்த படத்தில் இவானா, சத்யராஜ், ராதிகா, யோகிபாபு, ரவீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படம் மூலமாக பிரதீப் முதல் முறையாக நடிகராக அறிமுகமாகியுள்ளார்.

photo

ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்த லவ் டுடே படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. படம் தற்பொழுது வரை ஹவுஸ் ஃபுல்லாக ஓடிவருகிறது. சமீபத்தில் கூட நடிகர் ரஜினிகாந்த் படத்தை பார்த்து விட்டு இயக்குனரை நேரில் அழைத்து பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கத்து.

photo

இந்நிலையில், லவ் டுடே படம் படத்தை  தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் தனது குடும்பத்தோடு சென்று பார்த்துள்ளார். அப்பொழுது நடந்த ஒரு சுவாரசியமான நிகழ்வை ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியில் உதயநிதி பகிர்ந்துள்ளார்.

photo

அதாவது  “லவ் டுடே படத்தை அப்பா, அம்மா உடன் சேர்ந்து பார்த்தேன். படம் முடித்து வெளியே வந்ததும் படம் நல்லா இருக்கு உதயா என்று அப்பா சொன்னார். இதைவிட செம்ம காமெடி என் என்றால் அம்மா சொன்னது தான். படம் சூப்பரா இருக்கே, இதே மாதிரி நம்மளும் போனை மாத்திக்கலாமானு கேட்டாங்க. நானும், அப்பாவும் அய்யய்யோ வேணவே வேணாம்னு சொன்னோம்என சிரித்தபடி இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார்  உதயநிதி.

Share this story