‘நிறைய உண்மைகளை சொல்லியதால், பிரச்சனை’-உதயநிதியின் அதிரடி முடிவு.

PHOTO

கட்டா குஸ்தி’ படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி, இனி நான் நிறைய பேசப் போவதில்லை என தனது அதிரடி முடிவை தெரிவித்துள்ளார்.

செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கட்டா குஸ்தி’ இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின், ஐஸ்வர்ய லெட்சுமி, ஐஸ்வர்யா ரஜினிகாந்த்  ,தெலுங்கு நடிகர் ரவிதேஜா, கலைபுலி எஸ். தாணு என பலர் கலந்துக்கொண்டு பேசினர்.

photo

photo

அந்த வகையில் நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், இனி நான் அதிகம் பேச போவதில்லை, நான் நிறைய பேசினால் உண்மைகளை சொல்லி விடுகிறேன், அதனால் பிரச்சனை ஆகி விடுகிறது என கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் அரசியலில் நான் நிறைய உழைக்க வேண்டி உள்ளது, அதனால் சினிமாவில் நடிப்பதை குறைக்க உள்ளேன் என கூறியுள்ளார்.

photo

சமீபத்தில் உதயநிதி கலந்துக்கொண்டு பேசிய ஒரு வார இதழ் நேர்காணலில் அவர் படம் சார்ந்தும், செந்த வாழ்க்கை, அரசியல் குறித்தும்  நிறைய பேசியிருந்தார். அவற்றை வைத்து மற்ற கட்சியினர் கடுமையாக விமர்சித்த நிலையில் உதயநிதி இந்த முடிவை எடுத்தார? என மக்கள் மத்தியில்  கேள்வி எழுந்துள்ளது.

photo

இந்த கேள்விக்கு உதயநிதி விடை தருவார என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Share this story