மனதை உறைய வைக்கும் வடிவேலு பாடிய ‘ராசாக்கண்ணு’ பாடல்.. ‘மாமன்னன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியீடு !

MAAMANNAN

ஏ.ஆர்.ரகுமான் இசையில் வடிவேலு பாடிய ‘ராசாக்கண்ணு’ என்ற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. 

மா​ரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாமன்னன்’. அரசியல் மற்றும் த்ரில்லரில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது. உதயநிதியின் சொந்த நிறுவனமான ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரித்து வரும் இப்படம் ஜூன் மாதம் ரிலீசாகவுள்ளது. 

MAAMANNAN

இந்த படத்தில் உதயநிதியுடன் இணைந்து வடிவேலு மற்றும் பகத் பாசில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்னர். இந்த படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்றுள்ளது. தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

MAAMANNAN

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ராசாக்கண்ணு என தொடங்கும் அந்த பாடலை நடிகர் வடிவேலு பாடியுள்ளார். மனதை உறைய வைக்கும் இந்த பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. 

 


 

Share this story