உலக நாயகன் பிறந்தநாள் : தக் லைஃப் படத்தின் முக்கிய அப்டேட்

kamal
தக் லைஃப் படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் கடந்தாண்டு துவங்கப்பட்ட திரைப்படம் தக் லைஃப். கேங்ஸ்டர் பின்னணியில் எழுதப்பட்ட இக்கதையின் படப்பிடிப்பு சென்னை, தில்லி, ரஷியா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்றது. நடிகர்கள் கமல்ஹாசன், நாசர், சிலம்பரசன், ஜோஜூ ஜார்ஜ், அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி என பலர் நடித்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. படப்பிடிப்பின்போது நடிகர் ஜோஜூ ஜார்ஜுக்கு காலில் காயம் ஏற்பட, முக்கியக் காட்சிகளை எடுப்பதில் தாமதமானது.இறுதியாக, சில நாள்களுக்கு முன் முழுமையாகப் படப்பிடிப்பு நிறைவடைந்தது.  

இறுதியாக, நடிகை த்ரிஷாவின் நடனக்காட்சி ஒன்று மும்பையில் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படம் அடுத்தாண்டு ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நவ.7 ஆம் தேதி காலை 11 மணிக்கு தக் லைஃப் படத்தின் முக்கிய அப்டேட்வெளியாகவுள்ளதாக அறிவித்துள்ளனர்.

Share this story