படை தலைவன் படத்தின் 'உன் முகத்தை பார்க்கலையே' பாடல் வெளியானது
1732976968859
மறைந்த விஜய்காந்தின் மகன் சண்முக பாண்டியன். மதுரை வீரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நாயகன் சண்முக பாண்டியன் புதிய படம் ஒன்றில் நடித்துள்ளார். "வால்டர்", "ரேக்ளா" படத்தை இயக்கிய அன்பு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் கஸ்தூரி ராஜா, எம் எஸ் பாஸ்கர், யாமினி சந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.. இப்படத்திற்கு படை தலைவன் என தலைப்பிடப்பட்டுள்ளது. டிரைக்கடர்ஸ் சினிமாஸ் (Directors Cinemas) தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் முழுக்க முழுக்க காட்டுக்குள் நடக்கும் கதைக்களத்தில் பரபரப்பான திருப்பங்களுடன் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான உன் முகத்தை பார்க்கலையே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை இளையராஜா வரிகளில் அனன்யா பாட் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.