சூர்யா செய்ததை ஏற்று கொள்ள முடியவில்லை: இயக்குநர் கௌதம் மேனன் வேதனை

கௌதம் மேனன் இயக்கம் மற்றும் தயாரிப்பில் விக்ரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான திரைப்படம் துருவ நட்சத்திரம். ஆனால் பைனான்ஸ் பிரச்சனைகள் காரணமாக 2017 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட துருவ நட்சத்திரம் படம் பல பிரச்சனைகளைக் கடந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக கடைசி நேரத்தில் ரிலீஸ் ஆகவில்லை.
இப்போது வரை அந்த படம் ரிலீஸ் ஆகுமா ஆகாதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டும் அந்த படம் ரிலீஸாகாததால் சமூகவலைதளங்களில் ஒரு ட்ரோல் மெட்டீரியலாகவே மாறியுள்ளது. இந்த படத்தை விக்ரம் கூட கண்டுகொள்ளவில்லை.
"#Suriya shouldn't had a second thought to do #DhruvaNatchathiram, because we made Khakha & VaranamAayiram and so he could have trusted me. I tried to convince my best, but he didn't agreed. I'm really upset that Suriya denied the film"
— AmuthaBharathi (@CinemaWithAB) January 18, 2025
- GVM pic.twitter.com/TKIqUK3oRH
இந்நிலையில் இந்த படத்தில் முதலில் சூர்யா நடிக்க இருந்து பின்னர் மறுத்தது குறித்து கௌதம் மேனன் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “துருவ நட்சத்திரம் கதையை சூர்யா மறுத்ததைதான் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நாங்கள் இருவரும் இணைந்து காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய படங்கள் கொடுத்திருக்கிறோம். ஒருவேளை அந்த படம் தவறாகியிருந்தால் கூட என்ன ஆகியிருக்கும்? சூர்யாவுக்கு அடுத்த படம் வராமல் போய்விடுமா? நான்தானே படத்தைத் தயாரிக்கிறேன்? என்னை நம்பி அவர் வந்திருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.