உன்னி முகுந்தன் நடித்த 'கெட் செட் பேபி' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு

’மார்கோ' படத்தையடுத்து உன்னி முகுந்தன் நடித்திருக்கும் படம் ’கெட் செட் பேபி'.
நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நிலையில் இவர் நடிப்பில் வெளியான மாளிகப்புரம் திரைப்படமும் கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் சூரி நடிப்பில் வெளியான கருடன் திரைப்படத்தில் வில்லனாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் ’மார்கோ'. மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இப்படம் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலித்தது. இதனையடுத்து, இவர் நடித்துள்ள படம் 'கெட் செட் பேபி’. வினய் கோவிந்த் இயக்கி இருக்கும் இப்படத்தில் நிகிலா விமல் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
#GetSetBaby in cinemas worldwide, Feb 21st!
— Unni Mukundan (@Iamunnimukundan) February 5, 2025
A complete family movie!! pic.twitter.com/ilLJEFm3KT
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, இப்படம் வருகிற 21-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.