தமிழில் வெளியாகிறது உன்னி முகுந்தன் நடிப்பில் உருவான ‘மார்கோ’

marco

பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மார்கோ’ திரைப்படம் தமிழில் வரும் ஜனவரி 3-ம் தேதி வெளியாகவுள்ளது.
மலையாளத்தில் வெளியான ‘மார்கோ’ படத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்தப் படம் 5 நாட்களில் 50 கோடி வசூலித்தது. தற்போது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி இருக்கிறது.

marco
 
தமிழில் ஜனவரி 3-ம் தேதி வெளியாகும் என படத்தின் நாயகன் உன்னி முகுந்தன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் தமிழில் விளம்பரப்படுத்தும் பணிகளையும் படக்குழு தொடங்கவுள்ளது. இப்படத்தின் ரத்தம் தெறிக்கும் சண்டைக் காட்சிகளுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
ஹனிஃப் அடினி (Haneef Adeni) இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடித்துள்ள இப்படத்தினை ஷெரீப் முகமது தயாரித்துள்ளார். முழுக்க சண்டைக் காட்சிகள் நிறைந்த படமாக இது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தணிக்கை அதிகாரிகள் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளார்கள். சுமார் 30 கோடி ரூபாய் செலவில் இப்படம் தயாரிக்கப்பட்டது.

Share this story