உன்னி முகுந்தனின் 'மார்கோ' ரூ.100 கோடி வசூல்...!

marco

நடிகர் உன்னி முகுந்தன் நடித்த ‘மார்கோ’திரைப்படம் ரூ. 100 கோடியை வசூலித்துள்ளது.நடிகர் உன்னி முகுந்தன் மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் பல வெற்றி படங்களில் நடித்து கேரள ரசிகர்களையும் தாண்டி தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். அந்த வகையில் தமிழில் 'சீடன்' மற்றும் 'கருடன்' ஆகிய திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் உன்னி முகுந்தன். இயக்குனர் ஹனீப் அடேனி இயக்கத்தில் இவரது நடிப்பில் கடந்த 20-ந் தேதி வெளியான படம் 'மார்கோ'. இப்படத்திற்கு சந்துரு செல்வராஜ் ஒளிப்பதிவு செய்ய 'கே ஜி எப், சலார்' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இதற்கு இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தில் யுக்தி தரேஜா, சித்திக், ஜெகதீஷ், அபிமன்யூ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் இப்படமானது தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது. இந்தப் படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


ஆக்சன் காட்சிகள் நிறைந்து இருந்த இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று மாபெரும் அளவில் வெற்றியடைந்து வருகிறது. உலகளவில் இப்படம் ரூ. 100 கோடி வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இது உன்னி முகுந்தனின் முதல் ரூ. 100 கோடி திரைப்படமாகும். மேலும், நூறு கோடி வசூலித்த மலையாள சினிமாவின் பட்டியலில் 6வது இடத்தைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கு, கேஜிஎப் இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் இசையமைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Share this story