‘ஜெயிலர்’ டிக்கெட் பிளஸ் லீவ் கொடுத்த நிறுவனம்- உற்சாகத்தில் ஊழியர்கள்.

photo

சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் இன்னும் ஐந்து நட்களில் திரைக்கு வரவுள்ள ஜெயிலர் படதிற்காக தனது ஊழியர்களுக்கு டிக்கெட் வாங்கி கொடுத்து விடுமுறை வழங்கியுள்ளது மதுரையை சேர்ந்த Uno Aqua Care நிறுவனம்.  

photo

இது குறித்த செய்திதான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இது தொடர்பாக Uno Aqua Care நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்து இலவச டிக்கெட் கொடுத்ததையும் இது அவர்களின் அனைத்து கிளைகளுக்கும் பொருந்தும் என்பதையும்  குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டுமல்லமல் “ எங்கள் தாத்தா, அப்பா,  எங்க தலைமுறை மற்றும் எங்கள் மகன், பேரன் என்று எல்லோருக்கும் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் “ என குறிப்பிட்டுள்ளனர். அதனுடன் ‘வாழ்க ரஜினிகாந்த்’ என அந்த அறிக்கையை முடித்துள்ளனர். இந்த தகவலை அறிந்த பலருமே தங்கள் நிறுவனத்தில் இதுபோல வழங்கவில்லையே என மீம்ஸ் வாயியலாக  குமுறல்களை தெரிவித்து வருகின்றனர்.

Share this story