உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பயோ பிக்.. பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்துக்கு ‘அஜய் - தி அன்டோல்டு ஸ்டோரி ஆஃப் எ யோகி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். சாந்தனு குப்தா எழுதிய ‘த மொங்க் ஹு பிகேம் சீஃப் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில் இந்தப் படம் உருவாகிறது. யோகி ஆதித்யநாத்தாக ஆனந்த் ஜோஷி நடிக்கிறார். பரேஷ் ராவல், தினேஷ் லால் யாதவ், பவன் மல்ஹோத்ரா உட்பட பலர் நடிக்கின்றனர். ரவிந்தர் கௌதம் இயக்குகிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளிலும் இந்தப் படம் இந்த வருடம் வெளியாக இருக்கிறது. யோகி ஆதித்யநாத்தின் இளமைக் காலம், அவரது ஆன்மீக மற்றும் அரசியல் பாதையை வடிவமைத்த தருணங்கள் இந்தப்படத்தில் இடம்பெற்றுள்ளன.