விஜயின் கடைசி படம் -ஜனநாயகன் படத்துக்கும் "தி கோட்" பட செண்டிமெண்ட்

vijay
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் 35 வருடத்துக்கும் மேலாக நடித்து வருகிறார் .இவர் இவரின் தந்தை எஸ் .ஏ .சந்திரசேகர் இயக்கத்தில் முதன் முதலாக நாளைய தீர்ப்பு என்ற படத்தில் அறிமுகமானார் .அதன் பின்னர் கில்லி ,பகவதி ,செந்தூரபாண்டி ,துப்பாக்கி ,மெர்சல் ,புலி என்று பல்வேறு வெற்றி படங்களில் நடித்துள்ளார் .இந்நிலையில் அவர் ஒரு அரசியல் கட்சி ஆரம்பித்துள்ளார் .அதனால் இப்போது நடித்து வரும் ஜனநாயகன் படத்தோடு சினிமாவிற்கு முழுக்கு போடவுள்ளார் .
இந்த ஜனநாயகன்  படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லனாக பாபி டியோல் நடிக்கிறார். இவர்களுடன் சேர்ந்து முக்கிய கதாப்பாத்திரங்களில் நரேன், மமிதா பைஜு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியிட படக்குழு முடிவெடுத்துள்ளது .அதன்படி இதற்கு முன்பு வெளிவந்த கோட் படத்தின் வீடியோ விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி வெளியானது .அந்த  சென்டிமென்டை இந்த ஜனநாயகன் படத்திலும் புகுத்த முடிவெடுத்துள்ளனர் 
அதன் படி இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவை விஜய்யின் பிறந்தநாளான வருகிற ஜூன் 22-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

Share this story